C senthil

#BanNeet

1. நமது சமுதாயம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமுதாயமாக உள்ளது. டெல்லியில் உள்ள வசதிகள் கிராமத்தில் இல்லை முக்கியமாக தடையில்லா மின்சாரம். — NEET NOT REQUIRED

#BanNeet
2. பத்தாம் வகுப்பு வரை, பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து நன்கு மார்க் எடுத்தால் நாம் விரும்புகிற கல்வியை பெற முடியும் என்ற நம்பிக்கை கிராமபுற சிறு நகர்ப்புற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டு உள்ளார்கள். நீட் தேர்வை பற்றி பெற்றோர்களுக்கு போதிய விவரம் தெரியவில்லை. — NEET NOT REQUIRED

#BanNeet
3. பெரும்பாலான பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் குழந்தைகளுக்கு செலவு செய்து தனியார் பயிற்சி வகுப்புகளில் சேர்த்துவிட்டால் நீட் தகுதி தேர்வில் வென்று விடலாம் அதற்கான பணம் போதவில்லை என்றுதான் பெற்றோர்கள் நினைக்கிறார்கள். — NEET NOT REQUIRED

#BanNeet
4. நீட் என்பது தகுதித்தேர்வு என்றால் 18 வயது முடிந்த யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று சொல்லி அவர்களை மட்டுமே மருத்துவர்கள் ஆக்கலாம் அது அறிவுக்கு உகந்ததாக என்றும் இருக்காது. — NEET NOT REQUIRED

#BanNeet
5. குழந்தைகள் அனைத்து விதமான வெவ்வேறு கல்வி/பாடங்களையும் கற்று தேர்ந்து படித்து உள்வாங்கி பத்தாம் வகுப்பில் பெரும் மதிப்பெண்ணுக்கு ஏற்ற பாடங்களை 11 மற்றும் 12 வகுப்பு சேர்ந்து அதில் பன்னிரண்டாம் வகுப்பு மார்க்குக்கு தகுந்தாற்போல் அவர் அடுத்து படிக்க வேண்டும் என்று நினைப்பது சரியான ஒரு முயற்சி. சிறுவயதிலிருந்தே இதை நாம் பழக்கப்படுத்திக் கொண்டு வரலாம். கிராமப்புறம் நகர்ப்புறம் அனைத்து விதமான மக்களுக்கும் ஒரேவிதமான அமைப்பு முறையாக இருக்கும். — NEET NOT REQUIRED

#BanNeet
6. நீட் தேர்வு தனியார் பயிற்சி வகுப்புகளில் மாணவர்களை படிக்கத் தூண்டும், செலவழிக்கத் தூண்டும், காலத்தை வீணடிக்க தூண்டும். — NEET NOT REQUIRED

#BanNeet
7. மாநில பாடத்திட்டத்தில் பன்னிரண்டு வருடம் படித்துவிட்டு ஒன்றிய பாடத்திட்டத்தில் தேர்வு வைத்தல் தவறு. — NEET NOT REQUIRED

#BanNeet
8. வளர்ந்த நாடுகளின் அல்லது அந்நிய நாட்டு பாடத்திட்டத்தில் தேர்வு வைப்பது எவ்வளவு தவறோ அவ்வளவு தவறு ஏனென்றால் கிராமப்புற தாழ்த்தப்பட்டவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு அணைத்து நுழைவு தேர்வுகளும் தடை செய்யப்படவேண்டும். நுழைவு தேர்வுகள் அனைத்தும் தகுதி தேர்வுகள் அல்ல. — NEET NOT REQUIRED

#BanNeet
9. அணைத்து பள்ளிகளிலும் இரு பாலர் வகுப்புகள் கட்டாயமாக்க படவேண்டும். கல்லூரிகளில் சரி பாதி இடங்களை பெண்களுக்கு கொடுக்க படவேண்டும். — NEET NOT REQUIRED

#BanNeet
10. நமது மக்கள் அனைவரும் நூறு சதவிகிதம் படிப்பறிவை எட்ட வேண்டும். படிப்பு கட்டாயமாக்கப்படவேண்டும். முக்கியமாக தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்படுத்தபட்ட அனைவரும் அரசு செலவில் படிக்கவைக்கப்படவேண்டும். — NEET NOT REQUIRED

நன்றி

https://www.vikatan.com/government-and-politics/education/aval-vikatan-poll-on-tamilnadu-govts-stand-on-neet