இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு “காசு” என்ற பெயரில் ஒரு புதிய கிரிப்டோ நாணயத்தை வெளியிட்டால் மற்ற மாநிலங்களுக்கு நாம் ஒரு முன்னோடியாகவும் வருவாய் அதிகப்படுத்துவதற்கு ஒரு முதல் மாதிரியாகவும் இருக்கலாம். தமிழ்நாடு அரசு “காசு” என்ற பெயரில் நேரடியாகவோ அல்லது பொதுத்துறை நிறுவனத்தை ஆரம்பித்தோ வெளியிடலாம். தற்போதைய நிலையில் உச்சநீதிமன்றம் கிரிப்டோ நாணயத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. நவீன டிஜிட்டல் உலகத்தில், வருங்கால தலைமுறையினர் கிரிப்டோ நாணயம் அதிக அளவில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நமது மக்கள் அதை அன்றாடப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவார்கள். இதன் மூலம் தமிழக அரசாங்கத்திற்கும் வெளிநாட்டிலிருந்து கிரிப்டோ நாணயங்களை நிவாரண நிதியாக வாங்கிக் கொள்ளலாம். இதில் இருக்கக்கூடிய சாதக பாதக விளைவுகளை அகில உலக தகவல் தொழில்நுட்ப துறையினருடன் ஆலோசித்து செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.


If Tamil Nadu becomes the first state in India to issue a new cryptocurrency called “Kaasu” we can be a pioneer for other states and a first model to increase revenue. The Government of Tamil Nadu may issue directly under the name “Kaasu” or by launching a public sector entity. At present the Supreme Court has granted permission for cryptocurrency. In the modern digital world, there are opportunities for future generations to make greater use of cryptocurrency. Our people will use it for everyday use. Through this the government of Tamil Nadu can also buy cryptocurrencies from abroad as a relief fund. It would be better to consult with the global IT industry and implement the possible adverse effects.


https://www.tn.gov.in/